பத்து நாள் தடையுத்தரவின் பின் 19 சுற்றுலாப் பயணிகள் வருகை

Published By: Vishnu

02 Jun, 2021 | 09:52 AM
image

உள்வரும் பயணிகளுக்கு 10 நாட்கள் தடையுத்தரவு விதிக்கப்பட்டதன் பின்னர், நேற்றைய தினம் எட்டு விமானங்களினூடாக மொத்தம் 19 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

எட்டார் ஏயர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் ஆறு இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனங்களினால் இயக்கப்படும் விமானங்களினூடாக இவர்கள் நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

"நாடு முழுவதும் விரைவான தடுப்பூசி திட்டத்தின் விளைவாக இந்த எண்ணிக்கை ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அதன் துணைத் தலைவர் ராஜீவ் சூரியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு உள்வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியதன் மூலம், நேற்று மொத்தம் 567 பேர் நாட்டுக்கு வருகை தந்தனர். 

அதே நேரத்தில் வியட்நாம் மற்றும் இந்தியாவிலிருந்து பயணிகளின் வருகைக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

சுமார் 10 மாதங்கள் மூடப்பட்ட பின்னர் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இலங்கை மீண்டும் உள்நாட்டிற்கான சர்வதேச பயணங்களைத் தொடங்க விமான நிலையங்களை மீண்டும் திறந்தது. 

அப்போதிருந்து மே 20 வரை சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க 13,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21