தடுப்பூசிகளால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு - ஆய்வில் தகவல்

Published By: Digital Desk 3

02 Jun, 2021 | 09:24 AM
image

கொரோனா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதில் தடுப்பூசிகளுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ராக்கெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனா நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடிஸ்) ஆய்வு செய்து, மூலக்கூறுகளின் பரிணாமத்தை கண்காணித்தனர்.

இந்த ஆய்வில் கடந்த ஆண்டின் வசந்த காலத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 63 பேர் பயன்படுத்தப்பட்டனர்.

அவர்களை கண்காணித்து வந்ததில், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மெமரி, ‘பி’ செல்களால் உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு பொருள், கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ் கொவ்-2 வைரசை வீழ்த்துவதில் சிறப்பாக பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.

மெமரி பி செல்கள், நோய் எதிர்ப்பு தேக்கம் போல செயல்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு பொருளின் மாறுபட்ட தொகுப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஆய்வில், பயன்படுத்தப்பட்டுள்ள மக்கள் கொரோனா வைரசுக்கு எதிராக மேம்பட்ட நீண்ட கால பாதுகாப்பை வளர்த்துக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மொடர்னா அல்லது பைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ்-ஐ போட்டுக்கொண்ட நபர்களிடையே இந்த நோய் எதிர்ப்பு பொருள் இயல்பாக மேலும் அதிகரித்து இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களின் உடல்களில் உருவான நோய் எதிர்ப்பு பொருள், உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வலுவாக விளங்குகின்றன.

குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காக, அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தடுப்பூசிகளுடன் பூஸ்டர் சேர்கிறபோது, அது ஒரு போதும் கொரோனா தொற்றுநோயைப் பெறாதவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வு காட்டுகிறது.

 (தினத்தந்தி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52