இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது G தொடர் வகுப்பின் கீழ் நவீன GR5 Mini இனை நாட்டில் அறிமுகம் செய்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. 

இலங்கையிலுள்ள அனைவரும் நவீன விரல் அடையாள தொழில்நுட்பத்தை அனுபவிக்க ஏதுவாக ரூபா 29,999 என்ற அறிமுக விலையில் இந்த உற்பத்தியை தனது தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தினூடாக Huawei சந்தைப்படுத்தவுள்ளது. 

அரை செக்கனுக்கும் குறைவான நேரத்தில் தமது தொலைபேசியை திறப்பதற்கு (unlock) இடமளிக்கும் திறன்மிக்க விரல் அடையாள சென்சார் 2.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள GR5 இப்பிரிவில் கிடைக்கப்பெறுகின்ற அதிவிரைவான processor ஆன ஈடுஇணையற்ற Kirin 650- 16nm octa-core processor இனையும் கொண்டுள்ளது.

5.2 அங்குல அளவு கொண்ட முகத்திரை, மெல்லிய, சௌகரியமான வடிவமைப்பு ஆகியவற்றுடன் வெளிவந்துள்ள இந்த Mini உற்பத்தி வடிவங்கள், Huawei GR5 இன் தொழிற்திறன் அனைத்தையும் ஒன்றுசேர்த்து சந்தையிலுள்ள மிகச் சிறந்த Mini உற்பத்திகளுள் ஒன்றாக இதனை மாற்றியமைத்துள்ளது. 

தனது பாரிய அளவிலான வடிவு கொண்ட சாதனத்தைப் போலவே, Huawei GR5 Miniஆனது அரை செக்கனுக்கும் குறைவான நேரத்தில் தமது தொலைபேசியை திறப்பதற்கு (unlock) இடமளிக்கும் திறன்மிக்க விரல் அடையாள சென்சார் 2.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன் முற்றிலும் தலைசிறந்த உலோக வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த Mini வடிவத்தில் கமரா மற்றும் பட்டரி தொடர்பில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களோ அல்லது குறைவுகளோ கிடையாது. Huawei GR5 Mini மற்றும் Huawei GR5ஆகிய இரண்டுமே தத்ரூபமான புகைப்படங்களை வசப்படுத்தும் 13MP f/2.0பின்புற கமராவைக் கொண்டுள்ளன. அத்துடன் நீண்ட நேரத்திற்கு நீடித்து உழைக்கும் 3000mAh பட்டரியையும் கொண்டுள்ளன.

Device Huawei Sri Lanka இன் தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் எமது வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அமைவாகச் செயற்படுவதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் கண்டறிந்து, விளங்கி, நியாயமான விலையில் அவர்களது அபிலாஷைகளைப்பூர்த்தி செய்ய உதவி, தரமான உற்பத்தி மற்றும் எமது சேவை வழங்கல் மூலமாக உயர் தர நடைமுறைகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கு GR5 Mini மற்றுமொரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது”.

குறைந்த அளவிலான மின்வலு நுகர்வு மற்றும் அதிகரித்த பட்டரி ஆயுட்காலம் அடங்கலாக ஏராளமான சிறப்பம்சங்களை GR5 Mini தனது பாவனையாளர்களுக்கு உத்தரவாதமளிக்கின்றது. சிறப்பான பாதுகாப்பு பொறிமுறைகளுக்காக வலுவான விரல் அடையாள ஸ்கானர் ஒன்றை இத்தொலைபேசி கொண்டுள்ளதுடன், வெறுமனே ஆறு தொடுகைகள் மூலமாக விரல் அடையாளத்தை இலகுவில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

விரல் அடையாள சென்சார் ஆனது முன்னரை விடவும் விரைவானது, அதிக துல்லியத்தன்மை கொண்டது மற்றும் மிகவும் பாதுகாப்பானது.

1ஆவது தலைமுறையுடன் ஒப்பிடுகையில் அது 100% மேம்பட்டுள்ளதுடன் முகத்திரையை திறத்தல் (unlock), அழைப்புகளுக்கு பதிலளித்தல், கமராவை தொழிற்படுத்தல் மற்றும் அலாரத்தை நிறுத்துதல் ஆகியவற்றை அதி விரைவான முகத்திரை திறப்பு தொழில்நுட்பத்தின் மூலமாக முற்றிலும் இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்கின்றது.

முன்னோக்கியுள்ள 8MP(f/2.0) கமராவானது வலுவான, துல்லியமான செல்பிக்கு உதவுகின்றது. பரந்த கோணத்திலான (78°) 13MP f/2.0 பின்புற கமரா தத்ரூபமான புகைப்படங்களை வசப்படுத்த இடமளிக்கின்றது. Blue light filter மற்றும் மென்பொருள் அம்சங்கள் உங்களுடைய புகைப்படத்தை உயிரோட்டம் கொண்டதாக மாற்றியமைக்கின்றன. விரைவான Shutter வசப்படுத்தல் மற்றும் நேர இடைவெளி அம்சங்கள் வேகமான இயக்கத்திற்கு உங்களுக்கு உதவுகின்றன.

இச்சாதனம் சாம்பல் மற்றும் பொன் நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றது. இலங்கையில் ஸ்மார்ட்போன்களைச் சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள் அடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் மற்றும் நாடெங்கிலும் 1500 முகவர் காட்சியறைகளைக் கொண்டுள்ள சிங்கரின் டிஜிட்டல் ஊடக வலையமைப்பு ஆகியவற்றுடனான நாட்டின் அதி விசாலமான வலையமைப்பினூடாக இந்த உற்பத்திகள் அனைவருக்கும் கிடைப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.