தனுஷின் 'ஜகமே தந்திரம்' முன்னோட்டம் வெளியீடு ( முன்னோட்டம் இணைப்பு)

Published By: Digital Desk 4

01 Jun, 2021 | 08:32 PM
image

'அசுரன்', 'கர்ணன்' என தொடர்ச்சியாக வெற்றி படங்களை அளித்த நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.

சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'பேட்ட' படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் கோஸ்மோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்த திரைப்படம் இம்மாதம் 18ஆம் திகதியன்று நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதிரடி எக்சன் காட்சிகள் நிறைந்த இந்த முன்னோட்டத்தில், 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா' என தனுஷ் பேசும் வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

'ஜகமே தந்திரம்' படத்தை பட மாளிகையில் வெளியிடாமல் நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியிடுவதால் தயாரிப்பாளர் மீது அதிருப்தியிலிருந்த தனுஷ் இப்படம் குறித்து எந்தவித தகவலையும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிடாமல் இருந்துவந்தார். இந்நிலையில் தற்போது அவருடைய ட்விட்டர் பதிவில்' அற்புதமான பட மாளிகையில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை தர வேண்டிய 'ஜகமே தந்திரம்' படம் வேறு வழி இல்லாமல் டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது. இருந்தாலும் இந்த சுருளியை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.'என பதிவிட்டிருக்கிறார். இதனால் தனுஷ் ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37