முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசு விற்பதாக குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பானதாகும்: கெஹெலிய

Published By: J.G.Stephan

01 Jun, 2021 | 04:10 PM
image

(எம்.மனோசித்ரா)
இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானதாகும். பிரயோசனம் மிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது திட்டமிட்ட வகையில் அவை தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த  அவர் மேலும் கூறுகையில், இலங்கையில்  முக்கியத்துவமுடைய  பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கையில் தற்போது உபயோகிக்கப்படாத பாழடைந்துள்ள பல கட்டடங்களை இனங்கண்டு அவற்றை மீள்புனரமைத்து அவற்றை வருமானம் ஈட்டக்கூடிய இடங்களாக மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தபால் திணைக்களத்தில் 45 அடி பரப்பளவில் நூதனசாலை அமைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறான பிரயோசனம் மிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது திட்டமிட்ட வகையில் அவை தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24