அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்படைப்புலகமும் படைப்பாளர்களும்

Published By: Gayathri

01 Jun, 2021 | 01:55 PM
image

முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது, அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது.

தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்தபின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது.

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், இதழியியல், வானொலி, தொலைக்காட்சி முதலானவற்றை மதிப்பீட்டிற்குட்படுத்தும்போதுதான் புலம்பெயர் இலக்கியம் இங்கும் உலகளவிலும் எவ்வாறு பேசுபொருளானது என்பதையும் அறியமுடியும்.

இந்தியாவிலிருந்து ஒரு காலத்தில் இலங்கைக்கும் ஃபிஜி மற்றும் ஆபிரிக்காவிற்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமும் கல்வியின் பொருட்டும் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், 1983 இல் இலங்கையில் இனவாத வன்செயல் வெடித்ததன் காரணமாக தமிழர்களில் நிகழ்ந்த பாரிய புலப்பெயர்வின் பின்னர்தான் அவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கிய வாதிகளின் இயக்கத்தினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளானது.

இந்த சொற்பதத்தை முதல் முதலில் பிரயோகித்தவர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை. 

25-06-1989 ஆம் திகதி மெல்பனில் முருகபூபதியின் சமாந்தரங்கள் சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டுவிழாவில் எஸ்.பொன்னுத்துரை உரையாற்றினார். அன்றைய தினம் அவர் முன்மொழிந்த சொற்பதம்தான் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்.

அவுஸ்திரேலியாவில் வெளியான இதழ்கள், நூல்கள், இலக்கிய சிறப்பிதழ்கள், மலர்கள் பற்றி ஆராயப்புகுந்தால் புகலிட இலக்கியத்தில் எமது கங்காரு தேசத்தின் வகிபாகத்தையும் மதிப்பீடு செய்யமுடியும்.

எமது தமிழ் எழுத்தாளர்கள், அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களில் வாழ்ந்தவாறு தமது படைப்புக்களை நூலுருவாக்கி வருகின்றனர். 

இவர்களில் கி.இலக்‌ஷ்மண அய்யர், வேந்தனார் இளங்கோ, பாக்கியநாதன், எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, ஆ.கந்தையா, 'சுந்தர்' சுந்தரலிங்கம், தெ. நித்தியகீர்த்தி, அருண்.விஜயராணி, பொன். பூலோகசிங்கம், கலைவளன் சிசுநாகேந்திரன் , சண்முகம் சபேசன் ஆகியோர் மறைந்துவிட்டனர்.

கவிஞர் அம்பி, மாத்தளை சோமு, ஆசி. கந்தராஜா, சந்திரிக்கா சுப்பிரமணியன், செ.பாஸ்கரன், சவுந்தரி கணேசன், கார்த்திகா கணேசர், நா. மகேசன், கானா. பிரபா, சுந்தரதாஸ், மனோ.கேந்திரன், பிரவீணன் மகேந்திரராஜா, தேவகி கருணாகரன், சந்திரலேகா வாமதேவா, கீதா மதிவாணன், நவீனன் இராசதுரை, இளமுருகனார் பாரதி, தனபாலசிங்கம், எழில்வேந்தன், சாயி சஸி, அன்புஜெயா, ஆனந்தகுமார், திருநந்தகுமார், பாலம் லக்‌ஷ்மணன், பராசக்தி சுந்தரலிங்கம், யசோதா பத்மநாதன், பாமதி பிரதீப், சந்திரகாசன், நட்சத்திரன் செவ்விந்தியன், உஷா ஜவஹார், களுவாஞ்சிக்குடி யோகன், ரஞ்சகுமார், அன்புஜெயா ஆகியோர் சிட்னியிலிருந்து எழுதிக்கொண்டிருப்பவர்கள்.

மெல்பனிலிருந்து அண்ணாவியார் இளைய பத்மநாதன், முருகபூபதி, மாவை நித்தியானந்தன், 'பாடும் மீன்' ஶ்ரீகந்தராசா, சங்கர சுப்பிரமணியன், நடேசன், சிசு.நாகேந்திரன், மெல்பன் மணி, மெல்பன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், யாழ்.பாஸ்கர், ராணி தங்கராஜா, பாமினி செல்லத்துரை, கே.எஸ். சுதாகர், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கல்லோடைக்கரன், ஜெயராம சர்மா, ஆவூரான் சந்திரன், சகுந்தலா கணநாதன், கணநாதன், ஜே.கே., தெய்வீகன், ஶ்ரீநந்தகுமார், திருச்செந்தூரன், கந்தர் பாலநாதன், மகாராஜா ஶ்ரீராஜசேகரா, இராஜேந்திரா, ப. கனகேஸ்வரன், பொன்னரசு, உஷா சிவநாதன், சாந்தினி புவநேந்திரராஜா,ரேணுகா தனஸ்கந்தா, சாந்தா ஜெயராஜ், தமிழ்ப்பொடியன், கேதார சர்மா, செல்வத்துரை ரவீந்திரன், கலா.பாலசண்முகன், சிவசம்பு, ஶ்ரீகௌரி சங்கர், நவரத்தினம் அல்லமதேவன், கௌசல்யா ஜெயேந்திரா, சுபாஷினி சிகதரன், நிர்மலா அல்போன்ஸ், சாந்தி சிவக்குமார், விஜி இராமச்சந்திரன், அறவேந்தன், செல்வபாண்டியன், மாலதி முருகபூபதி, அசோக், கருப்பையா ராஜா, இரகுமத்துல்லா, பாலன் சுதன், ஷகிம் மத்தாயஸ், மஃருப், நளிமுடீன், வஜ்னா இரஃபீக், மரியம் நளிமுடீன் ஆகியோரும் மேற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து அமீர் அலி, கோபி, கன்பராவிலிருந்து 'ஆழியாள்' மதுபாஷினி, யோகானந்தன், குவின்ஸ்லாந்திலிருந்து தாமரைச்செல்வி, முகுந்தராஜ், வாசுகி சித்திரசேனன், ஆகியோரும் எழுத்தாற்றல் மிக்கவர்கள். இவர்களில் சிலரது படைப்புகள் நூலுருப்பெற்றுள்ளன.

சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கூத்து, மொழிபெயர்ப்பு, கட்டுரை, வாழ்க்கைச்சரிதம், விமர்சனம், ஆய்வு, பத்தி எழுத்துக்கள், அரசியல் விமர்சனம், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், நூலகம் - ஆவணம், சமையற்கலை முதலான துறைகளில் இவர்கள் எழுதியிருக்கிறார்கள். 

சில நூல்களுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகளும் தமிழக இலக்கிய அமைப்புகளின் விருதுகளும் கிடைத்துள்ளன.

சிலரது படைப்புகள் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அமீர் அலி, சகுந்தலா கணநாதன் ஆகியோர் தமது நூல்களை நேரடியாக ஆங்கிலத்திலேயே வெளியிட்டனர்.

மெல்பனில் வதியும் நல்லைக்குமரன் குமாரசாமி, மல்லிகை ஜீவாவின் 'எழுதப்படாத கவிதைக்கு வரையாப்படாத சித்திரம்' -வாழ்க்கை சரிதை நூலை, Undrawn Portrait for Un written Poetry என்ற பெயரிலும், ஜோர்ஜ் ஓவர்லின் Animal Farm நாவலை விலங்குப்பண்ணை என்ற பெயரிலும் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலை Butter fly Lake என்ற பெயரிலும் மொழிபெயர்த்துள்ளார். இந்நாவல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நவீனன் ராஜதுரை தமது தந்தையார் காவலூர் ராஜதுரையின் கதைகளை A Prophet Unhonourd என்றபெயரிலும் நடேசனின் மலேசியன் ஏயர் லைன் என்ற கதைத்தொகுதியை இலங்கையிலிருக்கும் “மடுளுகிரியே விஜேரத்ன உமதுவுவாத் ஒஹுன் பிரிமியெகி” என்ற பெயரிலும் முருகபூபதியின் சில சிறுகதைகளை இலங்கையிலிருக்கும் “கராமத் மதக்க செவனெலி” என்ற பெயரிலும் சிங்களமொழியில் மொழி பெயர்த்துள்ளனர். 

ஆசி. கந்தராஜாவின் கதைகளை தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பார்வதி வாசுதேவ், Horizon என்னும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

சிட்னியிலிருக்கும் கீதா மதிவாணன், அவுஸ்திரேலியாவின் மூத்த படைப்பாளி ஹென்றி லோசனின் கதைகளை “என்றாவது ஒரு நாள்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பல இதழ்கள், பத்திரிகைகள் முன்னர் வெளியாகியிருந்தபோதிலும், தற்போது எதிரொலி என்ற மாத பத்திரிகை மாத்திரமே வரவாகிக்கொண்டிருக்கிறது. 

சிட்னியிலிருந்து 'தமிழ்முரசு', மெல்பனிலிருந்து 'அக்கினிக்குஞ்சு' ஆகிய இணைய இதழ்கள் வெளிவருகின்றன. 

தற்போது தொடர்ந்தும் சிட்னியிலிருந்து மாத்தளை சோமு ஆசிரியராகவிருக்கும் 'தமிழோசை'யும்   மெல்பன் கேசி  தமிழ் மன்றத்தின் இளவேனில் சிறுவர் இலக்கிய இதழும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13