உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட் -19 இன் வகைகளுக்கு புதிய பெயரிடும் முறையை அறிவித்துள்ளது.
இனிமேல் உலக சுகாதார ஸ்தாபனம், கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட மாறுபாடுகளைக் குறிக்கும்.
அதன்படி இங்கிலாந்து மாறுபாடு ஆல்பா (Alpha), தென்னாபிரிக்க மாறுபாடு பீட்டா (Beta) மற்றும் இந்திய மாறுபாடு டெல்டா ( Delta) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது கொவிட்-19 வைரஸ் மாறுபாடு குறித்த விவாதங்களை எளிதாக்குவதோடு, பெயர்களில் இருந்து சில களங்கங்களை அகற்ற உதவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இந்திய அரசாங்கம் கடந்த ஒக்டோபரில் நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்ற மாறுபாட்டின் பெயரை "இந்திய மாறுபாடு" என்றே அடையாளப்படுத்தியது. ஆனால் அதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அதிகாரப்பூர்வமாக பெயரிடவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM