வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 3

31 May, 2021 | 04:12 PM
image

வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்தநிலையில் வியட்நாம் நாட்டில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியமிக்கது. இது காற்றிலும் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதுபற்றி அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் நகுயென் தன் லாங் தெரிவித்ததாவது,

புதிய உருமாறிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். இது அதிக வீரியமிக்க வைரசாகும். இது இந்தியாவிலும், இங்கிலாந்திலும் முதலில் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும்.

இந்த வைரசின் தனித்தன்மை என்னவென்றால், இது காற்றில் வேகமாக பரவக்கூடியதாகும். தொண்டை திரவத்தில் இந்த வைரசின் செறிவு வேகமாக அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலிலும் வலுவாக பரவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முன்பாக வியட்நாமில் 7 கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக வியட்நாம் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08