எங்கிருந்து தோன்றியது கொரோனா நச்சுயிரி? ‘கேள்வியிலுள்ள அரசியலும், விஞ்ஞானமும்’

Published By: Digital Desk 2

31 May, 2021 | 05:50 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை                                   

ஒரு புத்திசாலியான கேள்வி, ஞானத்தின் ஒரு பாதி என்பார்கள்.இப்போதொரு கேள்வி. அது புத்திசாலித்தனமான கேள்வியா, ஞானத்தின் தேடலா என்றெல்லாம் தெரியாது.அது கேட்கப்பட்ட கேள்வி தான். அதில் விஞ்ஞானம் இருக்கிறது. தீவிர அரசியலும் உள்ளது.பதில் தான் தெளிவாக இல்லை.

 கேள்வி இது தான், எங்கிருந்து கொரோனா வைரஸ் உருவானது?

 கண்ணுக்குத் தெரியாத நச்சுயிரி. அது பன்முக அவதாரம்பெற்று, 35 இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டுள்ளதாயின், நச்சுயிரியின்மூலாராம்பத்தை அறிய விழைதல் விஞ்ஞானம் தானே.

ஒரு வல்லரசு தேசத்தில் உருவாகி, இன்னொரு வல்லரசு தேசத்தைஏறத்தாழ முடக்கிய நுண்ணுயிர். முடங்கிய தேசம் பாதிப்பில் இருந்து மீண்டெழுந்து, இதுஎப்படி வந்ததெனக் கண்டறிவதற்காக மற்றைய தேசத்திற்கு எதிராக புலனாய்வுக்கு உத்தரவிடுமாயின்,அது அரசியல் தானே. 

நச்சுயிரியின் விஞ்ஞான பெயர் SARS-CoV-2. இந்தக்கிருமியால் உருவான நோயை உலக சுகாதார ஸ்தாபனம் பூகோள எல்லைகள் கடந்து பரவிய பெருந்தொற்றாகபிரகடனம் செய்துள்ளது. எனினும், வைரஸ் எங்கிருந்து தோன்றியதென திடமாகக் கூற முடியவில்லை.

 மூலத்தைக் கண்டறிதல் முக்கியமானது. அப்போது தான், கொரோனாபெருந்தொற்றாக உருமாறிய விதத்தை அறியலாம். அதன்மூலம், எதிர்காலத்தில் பெருந்தொற்றுக்கள்உருவாவதையும் தடுக்க முடியும்.

 SARS-CoV-2 பற்றிய கேள்விக்கு விஞ்ஞானிகளிடம் பதில்உண்டு. அவை திடமானவை அல்ல. தெளிவானவையும் அல்ல. இந்த பதில்கள் உலக சுகாதார ஸ்தாபனமும்,சீனாவும் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுகள். இப்படியும் இருக்கலாம் என்ற ஹேஷ்யத்தின்அடிப்படையிலானவை. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-30#page-18

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13