புகை பிடிப்போருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்படும் அபாயம் - உலக சுகாதார ஸ்தாபனம்

Published By: Digital Desk 4

31 May, 2021 | 09:46 PM
image

(க. பிரசன்னா)

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பீட்டின்படி, புகை பிடிப்போருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்படும் அபாயமும் மற்றும் மரணிக்கும் அபாயமும் அதிகம் காணப்படுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘புகைப்பதை நிறுத்துவதற்காக அர்ப்பணிப்போம்’ என்ற தொனிப்பொருளில் புகைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இணையவழி ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

புகைப்பொருளானது, பாவனையாளர்களில் இருவரில் ஒருவரின் மரணத்திற்கு காரணியாக அமைவதுடன் ஒரு நாளைக்கு சராசரியாக 55 இலங்கையர்கள் உட்பட வருடாந்தம் உலகளாவிய ரீதியில்; 8 மில்லியன் மக்களை அகால மரணத்துக்கு உள்ளாக்குகின்றது.

புகையிலை பாவனையானது, இருதய நோய், புற்று நோய், சுவாச நோய் மற்றும் நீரிழிவு ஆகிய தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக அமைகிறது.

மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இவ்வருட ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளிற்கு ஏற்ப, புகை பிடிப்போருக்கு கொவிட் - 19 ஏற்படும் அபாயமும் மற்றும் மரணிக்கும் அபாயமும் அதிகம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தது.

குறிப்பாக புகைப்பவர்கள், அடிக்கடி உதடுகளின் மீது கைகளை வைப்பதனால் கொரோனா வைரஸ் உடலினுள் செல்வதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

புகைப்பிடிப்போருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதனால், அவர்களுக்கு கொவிட் தொற்றும் சந்தர்ப்பம் அதிகமாகும். 

மேலும் கொரோனா வைரஸ் அவர்களின் உடலிற்குள் செல்லுமிடத்து, நுரையீரலின் செயற்பாடு பலவீனமடைவதுடன், அவர்களுடைய நோய் நிலைமை தீவிரமடைந்து மரணம் சம்பவிப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்;டு நிதியம் ஆகியன இணைந்து இலங்கையில் நடாத்திய கணக்கெடுப்பின் படி புகைத்தல் காரணமாக ஏற்பட்ட மரணங்கள், நோய்கள் மற்றும் வேறு தாக்கங்கங்களினால் இலங்கை பொருளாதாரத்திற்கு ரூபாய் 214 பில்லியன்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த ஆண்டில் புகையிலை நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம் ரூபாய் 92.9 பில்லியன் மாத்திரமே ஆகும்.

எனவே புகைப்பிடிப்போர் தமது பாவனையை நிறுத்த வேண்டியதும், அந்நிலைமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டியதும் தற்காலத்தில் அவசியமாகுமெனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04