எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட ஊடக அறிக்கை: மதத்தலைவர்களுக்கு தடுப்பூசிக்கு முன்னுரிமை அளித்தல்

Published By: J.G.Stephan

31 May, 2021 | 01:31 PM
image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

தடுப்பூசி, பொதுமக்களின் நோய்த்தடுப்பிற்கான தற்காலிக மருந்தே தவிர கொரோனா கட்டுப்பாட்டைப் நடைமுறையில் பூரணமாக அகற்றாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இதன்  முழு செயல்முறையையும் திட்டமிட்ட ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளும் பட்சத்தில் தான் சாத்தியமாகும்.

இந்த தொற்றுநோய் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரவுவதால், இது ஏற்கனவே அனைத்து சமூகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் விடயமாக மாறியுள்ளதால், இது மெதுவான போக்கை, குறுகிய பார்வை மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட கொள்கையாக மாறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் நாட்டின் முன்னணி துறவிகளில் ஒருவரும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் துறவிகளில் ஒருவருமான பத்தேகம சமித தேரர் காலமானார். இதற்கு முன்னதாக சேருவில மங்கள ரஜமஹா விகாரையின் தலைமை தேரர் அமரபுர கல்யானவங்ச மகா பிரிவினையின் கிழக்கு மாகாண பிரதான தலைமை தேரர் முங்கானே மெத்தானந்த கொவிட் வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் மரணித்ததோடு, அனுராதபுரம்,பன்டுலுகம,பெத்தானகம விகாரையைச் சேர்ந்த ஒரு தேரரும்,அநுராதபுர சாராணந்த பிரிவேனாவைச் சேர்ந்த கலாநிதி தலன்பிட்டியே மெத்தனந்த தேரரும், தம்புல்ல பனன்பிட்டியில் வாழ்ந்த ஒரு துறவியும், கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக அதே விகாரைகளில் இறந்தார்கள்.

இந்த நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பேரழிவு தாக்கியுள்ளது என்பதை இது குறிக்கிறது. இது குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி அனைத்து மதத் தலைவர்களுக்கும், குறிப்பாக துறவிகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41