யாழ். எழுதுமட்டுவாழ் சோதனை சாவடிக்கு அருகில் விபத்து - 8 பேர் காயம்

Published By: Digital Desk 3

31 May, 2021 | 01:03 PM
image

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை  கன்ரர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 08 பேர் காயமடைந்துள்ளனர் . 

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சோதனை சாவடிக்கு அருகில் கன்ரர் வாகனத்தை சடுதியாக நிறுத்த முற்பட்ட வேளையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை, குறித்த சோதனை சாவடியை இரவு நேரங்களில் அடையாளப்படுத்தும் முகமான மின் குமிழ்கள் ஒளிர விடப்படல் போன்றவை உரியமுறையில் செய்யப்படவில்லை என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

குறித்த சோதனை சாவடியுடன் கூட வாகனங்கள் மோதி விபத்துக்கள் இடம்பெற்ற பின்னரும் பொலிஸார் உரிய நடவடிக்கைள் எடுக்காது அசமந்தமாக செயற்படுவது குறித்தும் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04