வலுப்படுத்தப்பட்ட சீன அதிகாரம்

Published By: Digital Desk 2

31 May, 2021 | 01:51 PM
image

என்.கண்ணன்

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் அரசியல் தீர்வு, மற்றும் உரிமைகள் தொடர்பாக பேசுகின்ற போது மட்டும்,  ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறுகின்ற அரசாங்கம் தான், ஒரே நாட்டுக்குள் சீனாவுக்கு சார்பான அதிகார அலகு உருவாக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தது.

போர்க்கால மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு, வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது என்று கூறிய அரசதரப்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக வெளிநாட்டவரை கூட நியமிக்கத் தயாராக இருந்தது ஆச்சரியமே.

சீனாவின் பிடியில் இருந்து இலங்கையினால் இனிமேல் விடுபடவும் முடியாது, இந்தியாவினால், சீனாவின் தலையீடுகளை குறைக்கவும் முடியாது என்ற கட்டம்  உருவாகி விட்டது. மனித உரிமை மீறல்கள் விவகாரங்களுக்கு அடுத்ததாக, இலங்கை தொடர்பாக சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ள விடயம், கொழும்பு துறைமுக நகரம் தான்.கொழும்பு துறைமுகத்தை ஒட்டியதாக, சீனாவின் 1.4 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் அமைக்கப்படும் இந்த துறைமுக நகரம் இப்போது, கட்டுமானங்களை உருவாக்கும் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில் தான் துறைமுக நகரை நிர்வகிப்பதற்கான ஒரு தனியான ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது அரசாங்கம்,.துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை அமைக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.நாட்டின் அரசியலமைப்புக்கு கட்டுப்படாத வகையில்- பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறாத வகையில், தற்போதுள்ள நீதிமன்றக் கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில், தற்போதைய நிதிசார் சட்டங்களுக்கு வெளியே இந்த ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறான ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை, அவசர அவசரமாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது.எனினும், இந்தச் சட்டமூலத்தைச் சவாலுக்குட்படுத்தி 19 பேர் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளையும் மீறுவதாக உள்ளது என்றும், அதனால் இதனைச் சட்டமாக்குவதாயின்,மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று வியாக்கியானம் கூறியிருந்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-30#page-11

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04