சீன முகாம்களாக இலங்கை மற்றும் நேபாளம் - முன்னாள் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர்

Published By: Digital Desk 3

31 May, 2021 | 10:41 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்தியாவிற்குறிய நாட்டாட்சி எல்லையை லடாக்கில் சீனாவிடம் இழந்தோம். தற்போது நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே சீன முகாம்களாகியுள்ளன.

இந்திய வரலாற்றில் வலிமையான பிரதமரின் கீழ் இவை அனைத்தும் நடந்துள்ளதாக முன்னாள் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை மக்கள் செல்வாக்குடனான வலிமையான பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். ஆனால் இந்த காலப்பகுதயில் இந்திய - சீன எல்லைகளில் பல்வேறு முறுகல் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக லடாக்கில் எமது எல்லையை இழக்கும் நிலை ஏற்பட்டது. மறுப்புறம் இந்தியாவின் எல்லையை பகிர்ந்துக்கொண்டுள்ள நேபாளம் போன்ற நாடுகள் மற்றும் இலங்கை போன்ற அண்டைய நாடுகளில் சீனா மிக வேகமாக காலூன்றிவருகின்றது.

அதிலும் இலங்கை - நேபாளம் சீனாவின் முகாம்களாகவே உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சீனா மேற்கொண்டு வரும் பல திட்டங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதாக டெல்லி பல முறை கொழும்பிற்பு அறிவித்தது.

குறிப்பாக வடக்கு தீவுகளில் முன்னெடுக்கப்பட உள்ள மின் திட்டம் போன்றவை முக்கியமானவையாகும்.

மறுப்புறம் துறைமுக நகர் குறித்தும் டெல்லி மிகவும் கூர்மையாக அவதானிக்கப்படுவதாக கூறப்படுகின்ற நிலையில் முன்னாள் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50