கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும் மோசமாக பரவுகின்றது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Published By: Digital Desk 3

31 May, 2021 | 09:01 AM
image

(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டில் டெங்கு நோயும் மோசமாக பரவ ஆரம்பித்துள்ளதாகவும், டெங்கு மற்றும் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களுக்கு ஆரம்பத்தில் ஒரே விதமான நோய் அறிகுறிகளே வெளிப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகின்ற நிலையில் தற்போதுள்ள கொவிட் -19 வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமைகளில் இரு நோய்களையும் கையாள்வது குறித்த நெருக்கடி நிலைமைகளை அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவிக்கும் போது இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில் தற்போது நாட்டில் நிலவும் மழைக் காலநிலை காரணமாக டெங்கு நோயும் மோசமாக பரவ ஆரம்பித்துள்ளத்து. இதனால் மேலும் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாது கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவருக்கு வெளிப்படுத்தும் ஆரம்பகட்ட  அறிகுறிகளே டெங்கு நோயாளருக்கும் வெளிக்காட்டுகின்றது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, இருமல் மற்றும் உடல் வெப்பம் என்பன இரண்டு நோய்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளாகும்.

ஆகவே கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களுக்கு மேற்கொள்ளும் அதே பரிசோதனைகளை டெங்கு நோயாளர்களுக்கும் கட்டாயம் செய்ய வேண்டியுள்ளது.

அதன் பின்னர் எவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய முடியும். சகலருக்கும் சாதாரண மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொடுத்தால் அதனால் கொவிட்-19 வைரஸ் பரவும் அச்சுறுத்தலும் உள்ளது.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,811 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இந்த மாதத்தில் மொத்தமாக 545 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரணங்களும் பதிவாகியுள்ளன.

எவ்வாறு இருப்பினும் டெங்கு நோயாளர் ஒருவருக்கு நீண்டகாலம் சிகிச்சையளிக்க வேண்டியுள்ள காரணத்தினால் தற்போது வைத்தியசாலைகளில் நெருக்கடி ஏற்படும் நிலைமையொன்று உருவாகியுள்ளது.

எனவே மக்கள் தமது சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நீர் தேங்காத விதமாக வீட்டு சூழல், தோட்டம், ஏனைய சுற்றுப்புற சூழலில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08