பயணக் கட்டுப்பாட்டு கால உதவி தொகையை பெற தகுதியுடையோர் விபரம்

Published By: Vishnu

31 May, 2021 | 08:11 AM
image

கொவிட் 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ஒன்றினை வழங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய - ஜானாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட இருக்கும் 5000 ரூபாய்கள் உதவித் தொகையினைப் பெற தகுதியுடையோர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது:                  

1.நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்கள்.

2. சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.

3. சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்.

4. 70 வயதினைக் கடந்த மூத்தவர்கள்.

5. 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவிற்கான முத்திரையினைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.

6. மாற்றுத் திறனாளிகள்.

7. இதுவரை கொடுப்பனவினைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள்.

8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும்.

9. சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர்கள்.

10. ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனவினைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் - அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட பெறுவனவினைகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறுவதற்கு தகுதி உடையவராவார்.

11. இந்த உதவி தொகையினை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்கள் ஊடாக மக்கள் பெற முடியும்

இந்த சேவையினை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எனவே,  இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவினை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32