கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலத்தை உருவாக்குங்கள் - ரணில் வலியுறுத்தல்

Published By: Digital Desk 4

30 May, 2021 | 09:10 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் பொதுக் கொள்கை அடிப்படையிலான புதிய சட்ட மூலம் உருவாக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையினால் இந்த சட்ட மூலம் உருவாக்கப்பட்டு அது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எனக்கு அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் தாக்குதலை தடுத்திருப்பேன் - ரணில்  | Virakesari.lk

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்த போதிலும் , 7 மாதங்களின் பின்னரே அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பாரிய குற்றமாகும் என்றும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இன்று ஞாயிறுக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சுகாதார தரப்பினர் கொவிட் சிகிச்சையளித்தல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு தற்போது சோர்வடைந்துவிட்டனர்.

இதனால் எமது நாட்டின் வைத்திய கட்டமைப்பு வீழ்ச்சியடைக்கூடும். முறையான திட்டமிடலொன்றின் மூலம் இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

இதற்கு மருத்துவதுறையினரின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனினும் இலங்கையில் இதுவரையில் மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

அதே போன்று தற்போது எமக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் காணப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்த போதிலும் , 7 மாதங்களின் பின்னரே அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பாரிய குற்றமாகும்.

தற்போது தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய தீர்மானித்தாலும் , குறித்த நிறுவனங்களின் பிரநிதிகளுடாகவே அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏனையோர் இதன் மூலமும் இலாபம் பெறுவதற்கே முயற்சிக்கின்றனர். இதனை வருமானம் பெறும் இடமாக மாற்ற வேண்டாம்.

தற்போது உலகில் சில நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளன. இலங்கையில் அவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியேற்பட்டால் சுமார் மூன்றரை கோடி தடுப்பூசிகள் தேவைப்படும்.

அடுத்த வருடத்தில் தான் இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் நிறைவடையும். இதற்கு மத்தியில் இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்கவும் தயாராக வேண்டும்.

எனவே தடுப்பூசி வழங்கும் வரை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனம் இதற்கான ஆலோசனைகள் பலவற்றை வழங்கியுள்ளது. ஆனால் நாம் அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. தென்கொரியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை வைரஸ் கட்டுப்படுத்தலில் சிறந்த உதாரணமாகக் கொள்ள முடியும்.

எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். கொவிட் கட்டுப்படுத்தலுக்கான மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இது தொடர்பிலும் சிந்தித்து செயற்பட வேண்டும். பி.சி.ஆர். இயந்திரம் , செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது. தற்போதுள்ள ஆய்வு கூடங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

கொழும்பு , பேராதனை, ருஹூணு, யாழப்பாணம் மற்றும் றாகம ஆகிய பல்கலைக்கழங்களிலும் தற்போது காணப்படுகின்ற ஆய்வு கூடங்களுக்கு மேலும் பல உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆய்வுகளை முன்னெடுக்கின்ற இந்தியா, பிரித்தானியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

எனவே தற்போது இது தொடர்பில் பொது கொள்கை மற்றும் தயார்படுத்தல் தொடர்பான சட்டமூலம் அமைச்சரவையினால் உருவாக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியும் அமைச்சரவையும் இதனை தீர்மானிக்க வேண்டுமே தவிர வேறு யாருக்கும் இதனை கையளிக்கக் கூடாது. அத்தோடு அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும்.

இதே போன்று வைத்தியர்கள் , வர்த்தகர்கள், ஏனையயோருடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு மாதத்திற்குள் இதற்கான சிறந்த வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும் நாம் இதுவரையில் அதனை செய்யவில்லை. எனவே மேற்கூறியதைப் போன்று சட்டமூலத்தை தயாரிக்குமாறு அமைச்சரவையிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53