அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளத்தில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன 2009ஆம் ஆண்டு விவசாய மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பணியாற்றியபோது, அவரது செயற்குழுவின் உறுப்பினர் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று (Sydney morning Herald) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தான் சம்பந்தப்படவோ ஒத்துழைப்பு வழங்கவோ இல்லையென்றும், தனது அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.