அமெ­ரிக்க டென்னிஸ் வீராங்­கனை செரீனா வில்­லியம்ஸ் இந்த ஆண்டின் சிறந்த விளை­யாட்டு நட்சத்திரத்திற்கான விருதை வென்­றுள்ளார்.

இந்த வருடம் அசைக்க முடி­யாத வெற்­றி­களை பெற்ற செரீனா, ஸ்போர்ட்ஸ் இல்­லஸ்ட்­ரேட்டட் (Sports Illustrated) இந்த வரு­டத்­திற்­கான சிறந்த விளை­யாட்டு நட்சத்திரத்திற்கான விருதை பெற்­றுள்ளார்.

32 ஆண்­டு­க­ளுக்கு பிறகு வீராங்­கனை ஒருவர் ஆண்டின் சிறந்த நட்சத்திரத்திற்கான விருதை பெறு­வது இதுவே முதன்­மு­றை­யாகும். கடை­சி­யாக 1983ஆம் ஆண்டு மேரி டெக்கர் இந்த விருதை பெற்­றி­ருந்தார்.

இந்த வரு­டத்தில் செரீனா, தான் சந்­தித்த 56 போட்­டி­களில் 53இல் வெற்றி வாகை சூடி­யுள்ளார்.

இந்த வருடம் நடை­பெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லியா, பிரெஞ்ச் மற்றும் விம்­பிள்டன் ஆகி­ய­வற்றில் கிராண் ட்ஸ்லாம் கிண்­ணத்தை கைப்­பற்­றினார்.

தற்­போது 34 வய­தா­னாலும் தன்­னு­டைய தனித்­தி­ற­மையால் டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.