நீர் நிரம்பிய பானையில் தவறி விழுந்து குழந்தை பலி: கலேவெலயில் சம்பவம்

Published By: J.G.Stephan

29 May, 2021 | 12:16 PM
image

(செ.தேன்மொழி)
கலேவெல பகுதியில் ஒரு வருடமும் 8 மாதம் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வீட்டின் பின்னால் தண்ணீர் நிரப்பிவைக்கப்பட்டிருந்த பானையொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவஹூவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று பிற்பகல் 4.10 மணியளவில் தண்ணீர் நிரப்பப்பட்ட  பானையொன்றில் குழந்தையொன்று விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த குழந்தை தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் தாத்தாவின் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. வீட்டின் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த  குழந்தை, குறித்த தண்ணீர்  பானையில் தண்ணீர் எடுக்க முற்பட்ட போதே இவ்வாறு பானைக்குள் வீழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோரின் கவனக் குறைவின் காரணமாகவே இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், இது தொடர்பில் குழந்தையின் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51