25 வருட பூர்த்தியை கொண்டாடிய PLC  

Published By: Gayathri

28 May, 2021 | 08:25 PM
image

அரசாங்கத்துக்குச் சொந்தமான இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (PLC) தனது 25 ஆவது வருட நிறைவை மே 31ஆம் திகதி கொண்டாடவுள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்கள் கொண்டுள்ள நிகரில்லா விசுவாசம் மற்றும் கடந்த 25 வருடங்களாக நிறுவனத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே நாட்டிலுள்ள வங்கியல்லா நிதி நிறுவனங்களில் நம்பிக்கை மிக்க ஒரு நிறுவனமாக இந்தளவுக்கு சேவையை வழங்க முடிந்தமை தொடர்பில் அதன் தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணியாளர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து பிஎல்சி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளைகளை அமைத்து 2021ஆம் ஆண்டாகும்போது நிதிக்கான அணுகலை ஏற்படுத்த 112 கிளைகள் என்ற ஈர்ப்பான வலையமைப்பைக் கொண்டுள்ளது. 

ஆரம்பத்தில் மூவராகக் காணப்பட்ட குழு தற்பொழுது முற்றிலும் மாறுபட்டு 2,400 பணியாளர்களை பல்வேறு பதவி நிலைகளைக் கொண்டு முற்போக்காக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு 10 மில்லியன் ரூபாய்களாகக் காணப்பட்ட மூலதனம் தற்பொழுது 30.25 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்திருப்பதுடன், பிஎல்சி ஆனது இலங்கையில் வாகனங்களுக்கான கடன், தங்கக் கடன்கள், வர்த்தக கடன்கள், கல்விக்கான கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் தனிப்பட்ட கடன்கள் என பல்வேறுபட்ட உற்பத்திகள், சேவைகளை போட்டியான வட்டிவீதத்தில் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக பரிணமித்துள்ளது. 

பிஎல்சி தற்பொழுது தனக்கு கீழ் ஐந்து உபநிறுவனங்களைக் கொண்டிருப்பதுடன், போட்டிகளுக்கு அப்பால் நட்பான மற்றும் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டவையாக அமைந்துள்ளன.

இந்த மைல்கல்லான பயணம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தலைவர் சுஜீவ ராஜபக்ஷ குறிப்பிடுகையில்,

“உள்ளடக்கமான நிதித்துறையில் நிலைபேறான பாராட்டப்படும் வணிக முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது பீப்பிள்ஸ் லீசிங்கின் நீண்டகால நோக்கமாகும். செயற்பாட்டு சூழலில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை செயற்பாடு மற்றும் ஆபத்து முகாமைத்துவம் தொடர்பான நடைமுறை உள்ளிட்ட முகாமைத்துவத்தில் முன்னேற்றத்துக்கான தேவையை உணர்த்துகிறது. 

நிலைபேறான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வங்கி அற்ற நிதித்துறையினால் அர்த்தமுள்ள கடன்களை வழங்குவதை ஊக்குவிக்க இத்துறையில் உள்ள சக நிறுவனங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்பட பீப்பிள்ஸ் லீசிங் எதிர்பார்க்கிறது” என்றார்.

அதேநேரம், அர்ப்பணிப்பு மற்றும் நிறுவனத்தை தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவர பங்காற்றிய அனைத்து பணியாளர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்களக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷாமிந்ர மார்சிலைன் நன்றிகளைத் தெரிவித்தார். 

“சகல நேரத்திலும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவை என்ற கொள்கையை நிலைநாட்டுவதற்கு இணைந்து பணியாற்றும் எனது குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பிஎல்சி இன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மார்சிலைன் மேலும் தெரிவிக்கையில்,

“பங்குதாரர்களுக்கு பல்வேறு பொறுப்புள்ள பெறுமதியை ஏற்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள வணிகத்தை உருவாக்குவதை முன்கொண்டு செல்ல பிஎல்சி எதிர்பார்த்துள்ளது. 

உள்ளடக்கமான நிதித் தீர்வுகள் மற்றும் தரமான வாடிக்கையாளர் சேவைகள் ஊடாக எமது வாடிக்கையாளர்களை வலுவூட்ட செயல் விளைவுமிக்க தீர்வுகளை வழங்கக்கூடிய வகையில் எமது வணிக செயற்பாடுகளில் மேலும் ஒன்றிணைந்த பார்வையைக் கொண்டுவர நாம் உழைத்து வருகின்றோம். 

நிதித் துறையில் அரச - தனியார் கூட்டாண்மை முறையை ஏற்படுத்துவதற்கு பிஎல்சி ஆசைப்படுகிறது. நாம் இந்த இரண்டு உலகத்திலும் சிறந்தவற்றை கொண்டுள்ளோம். அரசாங்கத்துக்குச் சொந்தமான மக்கள் வங்கியின் பலம் மற்றும் தனியார் துறையின் உயிர்ப்புத் தன்மை என்பவற்றுடன் நாம் ஏன் இருக்க முடியாது என்பதற்கு காரணம்.

தொழில்நுட்பம் எமது சேவைகளை மேலும் ஒருங்கிணைப்பதுடன், செயற்பாட்டின் வினைத்திறனை மற்றும் துல்லியத்தை அதிகரிக்கும்போது, அணுகலை அதிகரிக்க முடியும் என நாம் நம்புவதால் பிஎல்சி வினைத்திறனுக்காக டிஜிட்டல் மயப்படுத்தப்படும். இந்தப் பரிமாற்றம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த 18 மாதங்களில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என நான் நம்புகின்றேன். 

அப்போது, உலக தொற்றுநோய் சூழலில் புதிய வளமைக்கு ஏற்றவாறு பரிமாணம் பெற்ற அரச நிறுவனமாக பிஎல்சியை எமது பங்குதாரர்கள், நிதித் துறை, மத்திய வங்கி எமது இறுதி உரிமையாளரான நிதி அமைச்சு என்பவற்றால் நிலைநாட்ட முடியும்” என்றும் மார்சிலைன் குறிப்பிட்டார்.

வருட நிறைவுடன் இணைந்ததாக மே மாதத்தில் பல்வேறு செற்பாடுகள் பிஎல்சி டவரில் முன்னெடுக்கப்பட்டதுடன், ஒரு வருடத்துக்கான பல்வேறு நிகழ்வுகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

வருடநிறைவு முத்திரை வெளியீடு, பணியாளர்களுக்கான அங்கீகார விருதுகள், இணைந்த வர்த்தக நாமத்துடனான கடன் அட்டை அறிமுகம், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பெண்களுக்கான உற்பத்திகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய செயலி அறிமுகம் என்பன இதில் அடங்கின. 

வருடாந்த நிறைவுக் கொண்டாட்டத்துடன் ஒருங்கு நேர்ந்ததாக சுற்றாடலுக்கு நட்பான மற்றும் வினைத்திறனாக சக்தி பயன்பாட்டைக் கொண்ட கிளையை வருட இறுதியில் அடையாளம் காண்பது தொடர்பான கலந்துரையாடல் முயற்சியும் இடம்பெற்றிருந்தது.

COVID -19 தொற்றுநோயின் மீள் எழுச்சியுடன் அரசு மருத்துவமனைகளில் COVID நோயாளி சிகிச்சை மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு விமர்சன ரீதியாக தேவையான மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத பொருட்களை வழங்குவது உள்ளிட்ட ஆண்டு முழுவதும் சமூகக் கூட்டுப் பொறுப்பு முயற்சிகளுடன் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் ஒருங்கு நேர்ந்ததாக அமைந்தன. 

வணிக நடவடிக்கைகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அறிமுகம் செய்தல், பொறுப்பான வணிக நடைமுறைகளை அங்கீகரித்தல் மற்றும் குறைந்த கார்பன் தடம் நோக்கி பசுமை நடைமுறைகளை பயனுள்ள முறையில் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கும் நிறுவன ரீதியில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி மக்கள் வங்கியின் உப நிறுவனம் என்பதுடன், கொழும்பு பங்குப் பரிவத்தனையின் பிரதான சபையின் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். 

இந்தக் குழுமம People's Leasing Fleet Management Limited, People's Leasing Property Development Limited, People's Leasing Havelock Properties Limited, People's Microfinance Limited மற்றும் People's Insurance Limited ஆகிய உப நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57