கொரியாவிற்கு பயணமாகும் இலங்கை கால்பந்தாட்ட குழாம் 

Published By: Digital Desk 4

28 May, 2021 | 07:55 PM
image

(எம்.எம்.சில்‍வெஸ்டர் )

2022  ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கான  ஆசிய வலய தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட குழாம் எதிர்வரும் 31 ஆம் திகதி தென் கொரியா நோக்கி பயணமாகவுள்ளது.

ஆசிய வலயத்துக்கான தகுதி காண் போட்டியில் இலங்கை , தென் கொரியா, லெபனான் ,துர்க்மேனிஸ்தான், வட கொரியா ஆகியவற்றுடன்  எச் குழுவில் அங்கம் வகிக்கின்றன.

எனினும், கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா போட்டியிலிருந்து விலகிக்கொண்டது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கால்பந்தாட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை அணி , பீபா தரவரிசையில் 202 ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.

இப்போட்டித் தொடரில் பலம் பொருந்திய தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு கோலையேனும் அடிப்பதை இலக்காக கொண்டு களமிறங்கவுள்ளது. 

இலங்கை அணி தனது முதல் போட்டியில் லெபனான் அணியை எதிர்வரும்  ஜூன் 5 ஆம் திகதியன்றும், தென் கொரிய அணியை எதிர்வரும் 9 ஆம் திகதியன்றும் எதிர்த்தாடவுள்ளது. 

இலங்கை அணியின் தலைவராக சுஜான் பெரேரா தலைவராகவும், அஹமட் ராசிக் மற்றும் கவிந்து இஷான் ஆகிய இருவரும் இணை உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை குடியுரிமையைக் கொண்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்களான மேர்வின் ஹெமில்டன், டிலான் செனத் டி சில்வா ஆகிய இருவரும் இலங்கை கால்பந்தாட்ட அணிக்காக விளையாடவுள்ளனர்.

இவ்விருவரில் மேர்வின் ஹெமில்டன் இலங்கை குழாமுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், டிலான் செனத் தென் கொரியாவில் இலங்கை குழாத்துடன் இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கால்பந்தாட்ட குழாம் விபரம் 

சுஜான் பெரேரா (அணித்தலைவர்),அஹமட் வசீம் ராசிக், கவிந்து இஷான், பிரபாத் ருவன் அருணசிறி, ஆர்.கே.தனுஷ்க, ஹர்ஷ பெர்னாண்டோ, ரொஷான் அப்புஹாமி, சமோத் டில்ஷான்,சரித்த ரத்னாயக்க,டக்சன் பஸ்லஸ்,சத்துரங்க மதுஷான்,மேர்வின் ஹெமில்டன், சலன சமீர, ஜூட் சுபன்,மொஹமட் முஸ்தாக்,மொஹமட் பசால்,டிலான் செனத் டி சில்வா, மொஹமட் ஆகிப்,அசிக்கர் ரஹுமான்,மொஹமட் அஸ்மீர்,சுப்புன் தனஞ்சய,ரிப்கான் மொஹமட், அமிர் அலைஜிக் (பயிற்றுநர்), ஆசிப் அன்சார் (அணி முகாமையாளர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21