வடக்கு மாகாண தொற்றுநோயியல் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Published By: Digital Desk 3

28 May, 2021 | 01:29 PM
image

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்றுநோயியல் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்களை கணக்காய்வு அறிக்கையினை அடிப்படையாக கொண்டு வெளிப்படுத்திய ஊடகவியலாளர் மீது பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந.சரவணபவனினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23.05.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்றையதினம் ஊடகவியலாளர் முருகையாக தமிழ்ச்செசல்வன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது.

வடக்கு மாகாண தொற்று நோயியல் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து கணக்காய்வு திணைக்களம் விசாரணை செய்து அறிக்கை சமர்பித்திருந்தது.

இந்த அறிக்கையின் பிரதியை தனது  செய்தி மூலம் ஒன்றுக்கு ஊடாக பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர் அதனை அடிப்படையாக கொண்டு செய்தி அறிக்கையினை எழுதியிருந்தார் குறித்த செய்தி பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்திருந்தது.

இதற்கு எதிராகவே  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டு ஊடகவியலாளாரிடம் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தவிர குறித்த ஊடகவியலாளர் இந்த ஊழல்கள் குறித்து தனது முகநூல்களில் பதிவுகளை இட்டிருந்தார் அதற்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊழலை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டமை ஒரு முதிர்ச்சியற்ற தன்மை எனவும், கடந்த காலங்களிலும் ஊடகவியலாளர்களால் இவ்வாறு பல்வேறு ஊழல்கள் முறைகேடுகள் தொடர்பில் செய்திகள் ஊடாக வெளிப்படுத்திய போது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் எவரும் நடந்துகொள்ளவில்லை என்றும்  மாறாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு  ஊழல் முறைகேடுகளில் ஈடுப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் ஊழல்கள் முறைகேடுகள் இடம்பெறாது இருக்க வழிசமைக்க வேண்டும்.

மாறாக  ஊழல்களை வெளிப்படுத்துவர்களை அடக்க முற்படுவது அதிகாரிகளுக்குரிய செயற்பாடாக இருக்காது என தெரிவித்துள்ள கிளிநொச்சி சமூக செயற்பாட்டாளர்கள் கிளிநொச்சியில் இது முதல் முறையாக இடம்பெற்ற புதிய அனுபவம் என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40