வவுனியாவில் முகக்கவசம் அணியாத நிலையில் தொற்றாளராக இனங்காணப்பட்டவருடன் தொடர்பை பேணிய 5 பேருக்கு கொரோனா

Published By: Gayathri

28 May, 2021 | 01:06 PM
image

வவுனியாவில் முகக்கவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்டு, தொற்றாளராக இனங்காணப்பட்டவருடன் தொடர்பை பேணிய 5 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (27.05.2021) இரவு வெளியாகின.

அதில் பயணக்கட்டுப்பாடு தளர்வின்போது வவுனியா ஹொரவபொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சீராக முககவசம் அணியாமையால் கைது செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பை பேணிய குறித்த வர்த்தக நிலையத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், நந்திமித்திரகம பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் ராணிமில் வீதியில் ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதிகள் இருவருக்கும், வவுனியா பொலிஸார் ஒருவருக்கும், கோவில்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஒருவருக்கும் என 14 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடு தளர்வின்போது முகக்கவசம் சீராக அணியாத நிலையில் ஹொரவப்பொத்தானை வீதியில் இஸ்லாமிய கலாசார மண்டபம் முன்பாகவுள்ள பல்பொருள் வியாபார நிலையத்தில் கடமையாற்றியபோது கைது செய்யப்பட்டவருடன் தொடர்புடைய 7 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22