வரையறுக்கப்பட்ட சேவைகளுக்காக தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் திறப்பு

Published By: Vishnu

28 May, 2021 | 08:35 AM
image

வரையறுக்கப்பட்ட சேவை வழங்கல் நடவடிக்கைக்காக தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் காலை 9.30 - பி.ப. 2.00 மணிவரை திறந்திருக்கும்.

கொவிட்-19 தொற்று நிலைமையின் மூன்றாம் பரவலுடன் நாடளாவிய ரீதியில் பயணக்காட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால், 2021 மே மாதத்திற்குரிய ஓய்வூதியம், விவசாயம்/ மீனவர் ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாது போனவர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை மாத்திரம் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரத்துடன், இக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் தங்களுடைய ஓய்வூதிய அடையாள அட்டை மற்றும் மேற்கூறிய கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தபால் அலுவலகங்களுக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்களால் ஏதேனும் அலுவலகங்கள் திறக்கப்படாவிட்டால் 1950 என்ற துரித அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04