நாவிழந்த அரசியல்

Published By: Digital Desk 2

27 May, 2021 | 01:24 PM
image

ஏ.எல்.நிப்றாஸ்   

ஒரு கடையில் தேனீர் குடித்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் சற்று அருகில் வந்தார். “தம்பி, இந்த 88 வயதில் சம்பந்தனுக்கும், 78 வயதில் மாவை சேனாதிராஜாவுக்கும் இருக்கின்ற தைரியமும், சமூகத்துக்காக பேச வேண்டும் என்ற எண்ணமும், 40-50 வயதில் இருக்கின்ற நம் முடவனுகளுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது? என்று கேட்டார்.

  

அவர் சொன்னது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை என்று புரிந்தது. ஆனாலும், தடாலடியாக அவர் கேட்ட கேள்விக்கு எந்தப் பதிலையும் உடனேயே சொல்ல முடியவில்லை. பிறகு, அவர் கேட்ட கேள்விக்கான பதிலையும் அவரே சொல்லி விட்டு விடைபெற்றார். கடைக்கு வெளியே அவர் காறி உமிழ்ந்தது காதில் விழுந்தது.

  

உண்மைதான்! தேர்தல் காலங்களில் மேடைகளில் பெரிய உரிமைப் போராட்ட வீரர்கள் போலவும், சமூகத்தின் காவலர்கள் போலவும் வீராப்புப் பேச்சுக்களை பேசுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்திற்காக உயிரையும் கொடுப்போம் என்று முழங்கியவர்கள், பிரச்சனை என்று வருகின்ற வேளையில் குரலைக்கூட கொடுக்காமல் நழுவல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர்.

  

இது பற்றி அவர்களை நோக்கி கேள்விக் கணைகள் தொடுக்கப்படுகின்ற போது, ‘பாராளுமன்றத்தில் பேசினால் மட்டும் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?’ என்று ஒரு ரெடிமேட் பதிலைக் கேட்பதுண்டு. ‘நாங்கள் மிகவும் சூட்சுமமான முறையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம், உள்ளரங்கமாக பேச வேண்டிய இடத்தில் பேசி வருகின்றோம்’ என்று சொல்வதும் வழமையானது.

  

அண்மைக்கால வரலாற்றில் சராசரியாக 20 பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் சமூகம் பெற்று வருகின்றது. ஆனால், அவ்வாறு பேச வேண்டிய இடத்தில் பேசி சமூகத்தின் எத்தனை முக்கியமான பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளார்கள் என்று கேட்டால், அவர்களுக்கு கோபம் தான் வருமே தவிர, சரியான விடை வராது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-23#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22