அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

27 May, 2021 | 07:50 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் காணப்படும் கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டே அமெரிக்காவினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் , ' இலங்கையில் நிலவும் கொவிட்-19 நிலைமை காரணமாக இலங்கைக்கான பயண ஆலோசனையை நிலை 3 ( பயணத்தை மீள் பரிசீலனை செய்யுங்கள்) மற்றும் நிலை 4 (பயணம் செய்ய வேண்டாம்) என்பவை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்குவதாகவும் , பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் விடுவிக்கப்பட்டிருந்த எந்த மாற்றமும் இல்லை ' என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த டுவிட்டர் பதிவிற்கு விளக்கமளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக  வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம்  இலங்கைக்கு 4 ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்றபோதிலும் இவ் எச்சரிக்கையில் பயங்கரவாதம் அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில்  இலங்கை தொடர்பில் நிலை 03 முதல் நிலை 04 வரையிலான பயண ஆலோசனை  வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை கருதி வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம்  பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு  தெரிவித்துக் கொள்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58