வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  கப்பல் ஊழியரான இந்தியருக்கு கொரோனா

Published By: Digital Desk 4

26 May, 2021 | 07:39 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில்,  9.5 கடல் மைல் தூரத்தில், எரிந்துகொண்டிருக்கும்  சரக்குக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இந்திய ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா | Virakesari.lk

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது இது தெரியவந்ததாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கேசரிக்கு  தெரிவித்தார்.

நேற்று காலை குறித்த கப்பலில் தீ பரவலுக்கு இடையே இரு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கப்பல் ஊழியர்கள் இருவர் இதன்போது காயமடைந்திருந்தனர்.

 இந் நிலையில் காயமடைந்த கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  கடற்படையினரால் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்  கெப்டன் இந்திக டி சில்வா  தெரிவித்திருந்தார். 

அந்த இருவரில் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.  அத்துடன் அக்கப்பலின் பணிக் குழுவில் இருந்த ஏனைய 23 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மீட்கப்பட்ட அனைவரும்,  கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, துறைமுக அதிகாரசபையின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39