கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட கைதி சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பியோட்டம்

Published By: Digital Desk 3

26 May, 2021 | 04:51 PM
image

(செ.தேன்மொழி)

கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கைதியொருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டதையடுத்து அவர், பூஸா சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கைதியொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதுடன் , இவர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைதியை அழைத்துச் செல்லும் போது மாத்தறை வீதியில் மின்கம்பமொன்று வீழ்ந்துள்ளதுடன் , அதன்காரணமாக குறித்த பகுதியில் வாகன நெறிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்போதே கைதி சிறைச்சாலை பஸ் ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற கைதியை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் , மாத்தறை பொலிஸாரும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19