காணாமல்போன சான்றிதழ் தொடர்பில் சிலர் பொய்யான செய்திகளை  பரப்புகின்றனர். அரசு வழங்கும் இச்சான்றிதழை பெற்றுக்கொள்வதன் மூலம்  சட்டச் சிக்கல்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என சபையில் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன், காணாமல்போனோர் என்ற  சாபத்திற்கு  விமோசனம்  காணவேண்டும். அது தொடர இடமளிக்கக் கூடாது என்றும் அவர்  தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில்  இன்று  இடம்பெற்ற இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை  ஆரம்பித்து  வைத்து  உரையாற்றும் போதே சுமந்திரன்  எம்.பி. இவ்வாறு  தெரிவித்தார்.