சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார்.

இலங்கை அணியின்  சகலதுறை ஆட்டக்காரரான டில்ஷான், 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492  ஓட்டங்களையும் 39 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை, 329 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 10248 ஓட்டங்களையும் 106 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

78 இருபதுக்கு -20  போட்டிகளில் விளையாடி   1884 ஓட்டங்களையும் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.