போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது..!

Published By: J.G.Stephan

25 May, 2021 | 12:34 PM
image

(செ.தேன்மொழி)
கம்பஹா பகுதியில் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் கம்பஹா பெத்தியாகொட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் , வெல்லம்பிட்டி - மீதொட்டுமுல்ல  பகுதியைச்  சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கம்பஹா குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, சீதுவ - அம்பலன்முல்ல பகுதியிலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது , அவ்வீட்டிலிருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது போலி 5000 ரூபாய் நாணயத்தாள்கள் 4 , 1000 ரூபாய் நாணயத்தாள்கள் 133 , 100 நாணயத்தாள்கள் 71 , 50 ரூபாய் நாணயத்தாள்கள் 747 , மடிக்கணனி, அச்சு இயந்திரம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். தற்போது போலி நாணயத்தாள்களை அச்சுடுவது அதிகரித்து வருவதனால், பண கொடுக்கல் வாங்களின் போது தங்களுக்கு கிடைக்கப்பெறும் பணம் போலியானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதன்போது பணம் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் , உடனே அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு அது தொடர்பில் அறிவிக்க வேண்டும். மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசேட பொலிஸ் குழுவினரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31