பாகிஸ்தானில் மியா கலிபாவின் டிக்டொக் கணக்கிற்கு தடை

26 May, 2021 | 03:28 PM
image

ஆபாச நட்சத்திரம் மியா கலீஃபாவின் டிக்டொக் கணக்கை பாகிஸ்தான் தடை செய்துள்ளது.

இதனை அவர் ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்ததோடு, இனிமேல் தனது சிறிய வீடியோக்களை மைக்ரோ பிளாக்கிங் தளத்திற்கு மறுபதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில், பாகிஸ்தானில் டிக்டோக் செயலி இரண்டு முறை  தடை செய்யப்பட்டு  மற்றும் தடை நீக்கப்பட்டப்பட்டது.

இந்நிலையில்,  மியா கலீஃபா “எனது டிக்டொக் கணக்கை நாட்டிலிருந்து தடை செய்ததற்காக பாகிஸ்தானுக்கு குரல் எழுப்புங்கள்.

பாசிசத்தைத் தவிர்க்க விரும்பும் எனது பாகிஸ்தான் ரசிகர்களுக்காக எனது அனைத்து டிக்டொக் வீடியோக்களை இப்போது டுவிட்டரில் மீண்டும் இடுகிறேன். ” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் செய்யாமல் மியாவின் டிக்டொக் கணக்கிற்கு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

டிக்டொக்கில்  மியாவுக்கு 22.2 மில்லியன் பின்தொடர்பவர்களும்,  270 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும் உள்ளன.

மியா கலீஃபா கடந்த காலங்களில் ட்விட்டரில் பல விடயங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

முன்னதாக மே மாதத்தில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேலிய படைகள் தாக்கிய பின்னர், மியா கலீஃபா பல டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு, "நான் லெபனானுக்காக ஜெபிக்கிறேன்" என்று சொல்வது போல் #FreePalestine சத்தமாக சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில், மியா கலீஃபா இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டார். ஆர்ப்பாட்டங்களில் இருந்து ஒரு படத்தை அவர் பகிர்ந்து கொண்டார் மற்றும் டெல்லியில் நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கடுமையான அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

மியா கலீஃபா மியா கே என்ற பெயரை கொண்ட சொந்த யூடியூப் சேனலை வைத்துள்ளார். அதில் விளையாட்டு மற்றும் பேஷன் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசுவார். இவருக்கு 8,00,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் மூன்று மாதங்களுக்குப் பிறகு வயதுவந்த-திரைப்படத் துறையிலிருந்து வெளியேறி மியாமிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10