கொசோவோ பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­வரும் ஆண்­டுக்­கான அர­சாங்­கத்தின் வர­வு­செ­லவுத் திட்டம் தொடர்பில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பைக் குழப்பும் வகையில் எதிர்க்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் கண்ணீர்ப் புகைப் பிர­யோகம் செய்­யப்­பட்­டது.

கொசோவோ பாரா­ளு­மன்­றத்தில் கண் ணீர்ப் புகைப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­ப­டு­வது கடந்த இரு மாத காலப் பகு­தியில் இது ஆறா­வது தட­வை­யாகும்.

இதன்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளி யில் கூடி­யி­ருந்த எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்கள் பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்தின் மீது கற்­களை வீசித் தாக்­குதல் நடத்­தினர். இந்­நி­லையில் சம்­பவ இடத்­திற்கு வந்த கலகத் தடுப்பு பொலி­ஸாரால் அவர்கள் கலைக்­கப்­பட்­டனர்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஆத­ர­வுடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட சேர்­பி­யா­வு­ட­னான உற­வு­களை விருத்தி செய்­வ­தற்கு உத­வக்­கூ­டிய உடன்­ப­டிக்­கை­யொன்று தொடர்பில் அந்­நாட்டு எதிர்க்­கட்­சி­யினர் கடும் எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

கொசோவோவானது 2008 ஆம் ஆண்டில் சேர்பியாவிடமிருந்து சுயமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது.