வவுனியா ஆடைத்தொழிற்சாலை செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Published By: Digital Desk 4

24 May, 2021 | 05:20 PM
image

வவுனியா ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம் தெரியப்படுத்தி ஆடைத் தொழிறசாலையில் ஏற்படும் கொரோனா தொற்று பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க நடவடிக்கை எடுப்பேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்திலும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மாவட்ட மட்ட கூட்டத்தில் பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. 

இருந்தாலும் சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பாக பொலிசாரோ அல்லது ஏனைய அரச உத்தியோகத்தர்களோ துணை போவது குறைவாக இருக்கிறது. எனவே அனைவரும் இணைந்தால் தான் கொரோனாவால் பாதுகாக்க முடியும்.

ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நிறைய சட்டதிட்டங்கள் உள்ளது. குறைந்தபட்சம் அங்கு வேலை செய்பவர்கள் அதிக இடைவெளிகளை பேண வேண்டும்.

ஆனாலும் நீங்கள் சொல்வதை என்ன கேட்பது என்ற நிலையில் தான் அவர்களது செயற்பாடும் உள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க உள்ளேன். 

அத்துடன் சுகாதார பணிமனைக்கு நிறைய தேவைகள் உள்ளன. அதனைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02