தளர்வுகளற்ற ஊரடங்கை முழுவதுமாக கடைப்பிடியுங்கள் : தமிழக முதல்வர் மக்களிடம் வேண்டுகோள்

Published By: Gayathri

24 May, 2021 | 02:50 PM
image

கொரோனாத் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்திருக்கும் தளர்வுகற்ற ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து, கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க உறுதி ஏற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக காணொளி ஒன்றை சுட்டுரையில் பதிவிட்டு, அதில் அவர் பேசியதாவது...

'முழுமையான தளர்வுகளற்ற ஊரடங்கை மக்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. முந்தைய ஊரடரங்கில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தியதால், தளர்வுகளற்ற பொது முடக்கம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அவசியமாகிறது. மருத்துவ தேவையைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம். 

அத்தியாவசிய பொருட்களும் வீடு தேடி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'கொரோனாவை யாருக்கும் கொடுக்க மாட்டேன். யாரிடமும் பெறவும் மாட்டேன்' என்று நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க உறுதி ஏற்போம்.' என மு.க.ஸ்டாலின் அதில் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே 24.05.2021 முதல் 30.05.2021 வரை ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50