இலங்கையை வீழ்த்த சூழ்ச்சி : ஆஸியின் அதிரடி மன்னன் இலங்கை வருகிறார்

Published By: Priyatharshan

25 Aug, 2016 | 12:14 PM
image

இலங்கை அணிக்கிடையிலான இருபதுக்கு - 20 போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியில்  அதிரடி மன்னன் மெக்ஸ்வெல் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியில் அதிரடி மன்னன் கிளென் மெக்ஸ்வெல் நீக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பதிலாக ட்ரெவ்ஸ் ஹெட் இணைக்கப்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியுடன்  இடம்பெற்ற 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட தொடரில் வையிட் வொஷ் ஆகியிருந்த நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதலில் இடம்பெற்ற இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்று 1-1 என சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், அணித் தலைவர் ஸ்மித்துக்கு ஓய்வு வழங்கப்பட்டு புதிய தலைவராக வோர்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக இருபதுக்கு -20 தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியில் மெக்ஸ்வெல், கிறிஸ் லின், ஜோன் ஹாஸ்டிங் போன்றோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய வீரர்களின் விபரம்,

டேவிட் வோர்னர் ( அணித் தலைவர்), ஸ்கொட் போலண்ட் , ஜேம்ஸ் போல்க்னர் , ஆரோன் பிஞ்ச், ஜோன் ஹாஸ்டிங், ட்ராவிஸ் ஹெட் , மொய்சஸ் கென்றிகியூஸ், கிறிஸ் லின், ஷோன் மார்ஷ், கிளென் மெக்ஸ்வெல், பீற்றர் நெவில், மிட்செல் ஸ்டார்க் , ஆடம் சம்பா  ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி பல்லேகலையிலும் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09