உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை

Published By: Vishnu

24 May, 2021 | 12:31 PM
image

வவுனியா, புளியங்குளம் சதுப்புநில பகுதியில்  காயமடைந்து  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  யானையை நேற்றைய தினம் சதுப்பு நிலத்திலிருந்து மேற்பரப்பிற்கு  கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா புளியங்குளம் புதூர் காட்டு பகுதியில் கடந்த 14 ஆம் திகதி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 12 வயது மதிக்கத்தக்க யானைக்கு இராணுவத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம மக்களின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் கல்நடை வைத்தியர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றார்.

இந்நிலையில் குறித்த யானையை விரைவாக குணப்படுத்த ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரதாபன், இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், மடுகந்தை பௌத்த துறவி மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையினை பார்வையிட்டதோடு, குறித்த யானை விரைவில் குணப்படுத்த என்ன மாற்றுவழி செய்யலாம் என உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் 11 நாட்களாக  சதுப்பு நிலத்தில் உள்ள யானை மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் சந்தனா ஜெயசிங்க, வவுனியா பிற கால்நடை அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வன்னி பாதுகாப்புப் படைகள் மற்றும் ஏராளமானோர் 

இணைந்து சதுப்பு நிலத்திலிருந்த யானையை நேற்றைய தினம் (23)  மாலை வெளியே எடுக்கப்பட்டு நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டிருந்து.

மீட்கப்பட்ட குறித்த யானை நிலத்திலிருந்து மேற்பரப்பிற்கு  கொண்டு வரப்பட்டு  தொடர்ச்சியாக சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08