தாக்தேயைத் தொடர்ந்து இந்தியாவை தாக்க வரும் 'யாஸ்' சூறாவளி

Published By: Vishnu

24 May, 2021 | 12:08 PM
image

தாக்தே சூறாவளியையடுத்து வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள 'யாஸ்' என்ற சூறாவளி மே 26 அன்று ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரைகளைக் கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை அவதானிப்பு நிலையம் திங்களன்று தெரிவித்துள்ளது.

155-165 கி.மீ வேகத்தில் காற்று வீசும் மிகக் கடுமையான 'யாஸ்' சூறாவளி மே 26 ஆம் திகதி நண்பகலில் பரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையில் ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது என்று கொல்கத்தாவின் பிராந்திய வானிலை நிலைய துணை பணிப்பாளர் சஞ்சிப் பந்தோபாத்யாய் குறிப்பிட்டார்.

இந்தப் புயல் திங்கட்கிழமை காலை ஒடிசாவின் பரதீப்பிலிருந்து தென்கிழக்கு 540 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளத்தின் திகாவிலிருந்து 630 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது.

மேலும் 'யாஸ்'  வட-வடமேற்கு நோக்கி நகர்ந்து புதன்கிழமை காலைக்குள் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளுக்கு அருகிலுள்ள வடமேற்கு வங்க விரிகுடாவை அடையும்.

கடலோர மாவட்டங்களான பூர்பா மற்றும் பாசிம் மெடினிபூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனா, ஹவுரா மற்றும் ஹூக்லி ஆகியவற்றில் மே 25 முதல் புயல் தாக்கத்தினால் கன மழை பெய்யக் கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒடிசா அரசாங்கம் திங்களன்று கொரோனா வைரஸ் அவசரகால நிலையை தளர்த்தியதுடன், மே 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 10 கடலோர மாவட்டங்களில் கடைகள் திறந்து வைக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம் ஒடிசா அரசாங்கம் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளதுடன், புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் உறுதிபடுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25