இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து ; 14 பேர் பலி

Published By: Digital Desk 3

24 May, 2021 | 12:49 PM
image

இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் உயிர் தப்பிய ஒரு  சிறுவன் எலும்புகள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் இத்தாலியில் வசித்த நான்கு பேர் கொண்ட  ஒரு குடும்பத்தினர் உட்பட 6 இஸ்ரேலிய பிரஜைகள் உள்ளடங்குவதாக  இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

விபத்து தொடர்பாக இத்தாலி அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த கேபிள் கார் சுமார் 50 அடி விழுந்ததாக நம்பப்படுவதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ஏரி ஒன்றை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட ஏதுவாக கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கேபிள் கார் சேவை அண்மையில் மீண்டும் தொடங்கியதால் ஏராளமானோர் வருகை புரிந்தனர்.

இந்நிலையில் நேற்று கேபிள் கார் ஒன்று நடுவழியில் அறுந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா தனது இரங்கலைத் தெரிவிக்கையில், போக்குவரத்தில் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடுமையாக மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47