மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்

Published By: Digital Desk 4

23 May, 2021 | 08:25 PM
image

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு கடந்த 18 ஆம் திகதி தீபச் சுடர் ஏற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழசைசேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 

கடந்த 18 ஆம் திகதி நீதிமன்ற தடை உத்தரவை மீறி  கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்தனர். 

குறித்த நினைவேந்தல் நிகழ்வை தலைமைவகித்து செய்திருந்த லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அவருடைய வீட்டிற்கு 3 தடவைகள் பொலிசார் சென்ற போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் மனைவி அதனை பெறமாட்டேன் என தெரிவித்த நிலையில் அவரின் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிசார் ஒட்டியுள்ளனர் 

இந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு  பெறப்பட்ட லவக்குமார் 10 பேருடன் சென்று  நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி அதன் பின்னர் பூக்களை கடலில் தூவினர் அதனை படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54