மூன்றாவது அரசியல் சக்தியை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்

Published By: Digital Desk 2

23 May, 2021 | 04:49 PM
image

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்று வெறும் ஒன்றரை வருடங்களே நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மூன்றாவது அரசியல் சக்தியை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சந்திரிகா, மைத்திரி, சம்பிக்க, ஆகியோர் முதற்கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதோடு, மங்கள, ரணில் தரப்பும் அடுத்தடுத்து வரும் காலங்களில் பங்கேற்கலாம் என்று தெரியவருகின்றது.

  

பொதுஜன பெரமுனவை நம்பி கைகோர்த்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் அவரது அணியும் ‘உரிய அந்தஸ்து’ அற்று இருக்கின்றனர். சஜித்தை நம்பி கட்சியைத் துறந்த சம்பிக்க ‘நடுத்தெருவில்’ நிற்கின்றார். மங்கள, சந்திரிகா இணை, ராஜபக்ஷ தரப்பினை சவாலுக்கு உட்படுத்தவல்ல ‘அரசியல் அணியை உருவாக்க வேண்டும்’ என்று ஏற்கனவே திட்டமிட்டுள்ளன.

  

மறுபக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.க.வைப் பலப்படுத்துவதோடு இழந்த ‘கௌரவத்தை’ மீட்க வேண்டும் என்பதற்கான போராட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றார்.

  

இவ்வாறு தனித்தனியாக இருக்கும் தரப்புக்கள் ஒன்றிணைவதற்குரிய பூர்வாங்கச் செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பவர் சந்திரிகா தான். அதற்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க,  ஹட்சன் சமரசிங்க ஆகியோரை தனது இல்லத்தில் ஒரே நேரத்தில் சந்தித்திருக்கின்றார் சந்திரிகா. சுதந்திரக் கட்சிக்கான உரிமைப் போராட்டத்தில் சந்திரிகாவும், மைத்திரியும் முரண்பட்டிருந்தனர். அதேபோன்று தான் கடும்போக்கு சிங்கள தேசியவாத, பௌத்த நிலைப்பாட்டைக் கொண்ட சம்பிக்கவுடனும் சந்திரிகா, மைத்திரிக்கு நல்லுறவு கிடையாது. மறுபக்கத்தில் பிரதமர் மஹிந்தவின் ‘விசுவாசியாக’ இருந்தவர் ஹட்சன் சமரசிங்க. இவ்விதமான நால்வர் எவ்வாறு ஒரு மேசையில் அமர்ந்தார்கள் என்பது ஆச்சரியமே.

  

ஆனால், அவர்கள் நால்வரும் அண்மையில் ஒரே மேசையில் அமர்ந்தார்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தல்தலில் எவ்வாறான வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது, ஆதரிப்பது தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றார்கள். குறிப்பாக, சந்திரிகாவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவிற்கு அரசியல் பிரவேசமளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விமுக்தி தற்போது லண்டனில் இருக்கிறார்.  அவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது கூட்டணி ஒன்றின் சார்பாக களமிறக்காலாமா என்பது தொடர்பில் இந்த நால்வரும் ஆராய்ந்துள்ளனர்.

  

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்குவதற்கே எதிர்பார்த்துள்ளதாக ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார்.  எனவே நாமலை எதிர்த்தும், எதிரணி பக்கத்திலிருந்தும் களமிறக்கவல்ல ஒரு இளம் வேட்பாளராக விமுக்தி காணப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த சந்திப்பின் போது எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

கடந்த ஆட்சிக்காலப் பகுதியில் இலங்கைக்கு வந்திருந்த விமுக்தி குமாரதுங்கவிடத்தில் அரசியல் நாட்டம் மற்றும் பிரவேசம் தொடர்பில் கேட்டபோது, ‘நான் விரும்பவில்லை, அப்பாவின் பிரிவே அதனால் தான்’ என்று பதிலளித்திருந்தார். இப்போது அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதை தாயார் சந்திரிகா மட்டுமே அறிவார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-23#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18