தொற்று தீவிர நிலையில் இருக்கின்ற போதிலும், கிரகத்தில் ஒரு உயரும் சக்தியாகவே இந்தியா உள்ளது..!

Published By: J.G.Stephan

23 May, 2021 | 01:18 PM
image

கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிர நிலையில் இருக்கின்ற போதிலும் ஒரு உயரும் சக்தியாக இந்தியா நிலைத்திருப்பதாக வெளிவிவகார கொள்கை நிபுணரும் மூத்த எழுத்தாளருமான  ஜான் சி. ஹல்ஸ்மன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பல்துறைசார் வருமான ஊற்றுக்களை  கையாழுகின்ற  விதம் சிந்திக்க வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல வாரங்களாக வைத்தியசாலைகளில் கட்டில்கள் மற்றும் ஆக்சிஜன் விநியோகம் என்பன கடுமையாக பற்றாக்குறையை எதிர்க்கொண்டதுடன் கொடிய  கொவிட்-19 வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு இந்தியா சாட்சியாகியுள்ளது. 2,91,331 உயிர்கள் இந்த வைரஸினால் காவுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இழப்புகள் நாட்டை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.

'அதன் உண்மை மற்றும் வெளிப்படையான தொல்லைகள் இருந்த போதிலும் இந்தியா இந்த கிரகத்தில் மிகப்பெரிய  உயரும் சக்தியாக உள்ளது  என்பதில் சந்தேகமில்லை என வெளிவவிவகார கொள்கை நிபுணரும் மூத்த எழுத்தாளருமான  ஜான் சி. ஹல்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால அரசியல் ஸ்தீரத்தன்மை மற்றும் ஏற்கனவே முன்னேற்றத்தில் உள்ள பொருளாதார புள்ளிவிவர உயர்வு ஆகியவை இந்தியாவின் தேவைகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இவ்வகையான அரசியல் நன்மைகளுடன் இணைந்து இந்தியாவின் மக்கள் தொகை 2024 ஆண்டில் உயரும் என்றும் இத்தொகையானது சீனாவை மிஞ்சும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் 65 சதவீதமானர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர்.

இதுவொரு வலுவான எதிர்காலத்தின் அடித்தளமாகின்றது. எதிர்காலத்தில் நாடு காணக்கூடிய பொருளாதார முன்னேற்றம் 2050 உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 வீதத்தை  இந்தியா கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47