திரு­கோ­ண­மலையில் இந்­திய பொரு­ளா­தார வல யத்தை அமைப்­ப­து தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் இது­வ­ரையில் எந்­த­வி­த­மான இறுதித் தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று புதன்­கி­ழமை சபையில் தெரி­வித்தார்.

ஆனால் திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள கடற்­படை மற்றும் விமா­னப்­படைக்கு சொந்தமான காணி­களில் எவ்­வித மாற்­றமும் செய்­யப்­ப­ட­மாட்­டாது என்றும் பிர­தமர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி பிமல் ரத்னாயக எழுப்­பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அண்­டி­ய­தாக இந்­தி­யாவின் விசேட பொரு­ளா­தார அல்­லது கைத்­தொழில் வல­ய­மொன்றை அமைப்­ப­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளதா என தேசிய பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்­ச­ரென்ற ரீதியில் இக்­கேள்வி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கேட்­கப்­பட்­டது.

பிர­தமர் தனது பதிலில் மேலும் தெளி­வு­ப­டுத்­து­கையில்,

திரு­கோ­ண­மலையில் இந்­திய பொரு­ளா­தார வல­ய­மொன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இவ் வல­யத்தை இலங்கை நிறு­வனம் அமைத்து அதனை இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கு­வதா அல்­லது இந்­தி­யா­விற்கு நிறு­வ­னங்கள் அமைப்­ப­தற்கும் நிர்­வா­கிப்­ப­தற்கும் அனு­மதி வழங்­கு­வதா? என்ற விட­யங்கள் தொடர்­பாக தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

அதே வேளை சிங்­கப்பூர் நிறு­வ­ன­மொன்று திரு­கோ­ண­ம­லையில் பொரு­ளா­தார வல­யங்களை அமைக்­கப்­ப­டு­வது தொடர்பில் இலங்கை அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. அத்­தோடு கணிப்­பீ­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றன என்றும் பிர­தமர் தெரி­வித்தார்.

இதன்­போது குறுக்­கிட்ட ஜே.வி.பி. எம்.பி பிமல் ரத்னா­யக இலங்­கையில் யாருடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­டு­கின்­றது என இடைக்­கி­டையே கேட்டார்.

இதற்கு பதி­ல­ளித்த பிரதமர்

மாகாண (மெகா பொலிஸ்) அமைச்சின் உய­ர­தி­காரி அஜித் கொஸ்தா உட்­பட அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. அதே­வேளை திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டைக்கு சொந்­த­மான காணி­களில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது.

அக் காணிகள் இன்றிருப்பதைப் போன்றே தொடர்ந்து காணப்படும்.

அதேவேளை திருகோணமலை பொருளாதார வலயம் தொடர்பில் எவ்விதமான இறுதி முடிவும் இன்று வரை எடுக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.