ராவல்பிண்டி வீதி திட்ட ஊழல் மோசடி பாகிஸ்தான் பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்

Published By: Digital Desk 2

22 May, 2021 | 07:49 PM
image

ஏ.என்.ஐ

ராவல்பிண்டி வீதி திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக  கூறப்படும் குற்றச்சாட்டு காரணமாக பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக்  மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி என்பன வலியுறுத்தியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் , பஞ்சாப் முதலமைச்சர் உஸ்மான் புஸ்தார் மற்றும் உள்துறை ஆலோசகர் ஷாஜாத் அக்பர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக  ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஊழலில் சிக்கயவர்களை அரசாங்கம் பாதுகாப்பதாக சாடியுள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்   தலைவருமான ஷாஹித் கான் , பிரதமர் மாளிகையில் உள்ள அனைவரும் நிதி தேடுவதில் மும்முரமாக உள்ளதாகவும் இரட்டை தரமான நீதி செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

என்னை போன்று ஷாபாஸ் ஷெரிப் மற்றும் அஹ்சன் இக்பால் ஆகியோருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் சிறைவைக்கப்பட்டனர். ஆனால் இதுவரை ராவல்பிண்டி வீதி திட்டத்தில் மோசடியில் யாரும் கைது செய்யப்பட வில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில்  ராவல்பிண்டி வீதி திட்டத்தில் மோசடி குறித்து ஆராயுமாறு பாகிஸ்தான் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தின் தலைவர்  ஜாவேத் இக்பால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47