உடற்பயிற்சி சோதனையில் இரு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தோல்வி !

22 May, 2021 | 12:34 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பங்களாதேஷில் கிரிக்கெட் சுற்றுலாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக நடைபெற்ற உடற்பயிற்சி பரிசோதனையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் நாளை (23) ஆரம்பமாகவுள்ளது. 

இந்நிலையில், வீரர்களுக்கான உடற்பயிற்சி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவேளையிலேயே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் தோல்வியடைந்துள்ளனர்.

இவ்வாறு, பங்களாதேஷில் நடத்தப்பட்ட இந்த உடற்பயிற்சி பரிசோதனையில் தோல்வியுற்ற இருவரும், இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்களா என்பதை  உறுதியாக கூறமுடியாதுள்ளது.  

அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை உடற்பயிற்சி பரிசோதனையில் ஈடுபட நேரிடும். அதில் அவர்கள் வெற்றியடைந்தால் மாத்திரமே இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இணைத்துக்கொள்ளவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உடற்பயிற்சி பரிசோதனையில் தோல்வியடைந்தவர்கள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இந்த பருவக்காலத்துக்கான சம்பள ஒப்பந்தத்தில் அதிகூடிய தொகை (ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்) வழங்கப்பட்டுள்ள தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09