சீனாவில் இரு பெரும் நில அதிர்வுகள்: 3 பேர் பலி, 70 ஆயிரம் பேர் பாதிப்பு !

Published By: J.G.Stephan

22 May, 2021 | 10:44 AM
image

சீனாவில் நேற்று இரவு இடம்பெற்ற இரு பெரும் நில அதிர்வுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.34 மணியளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் 7.4 ரிச்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகாத போதும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, நேற்று இரவு 7.18 மணிக்கு சீனாவின் டாலிக் பகுதியில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47