வழிதவறிச் சென்றவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அழைப்பு

Published By: Digital Desk 2

22 May, 2021 | 11:25 AM
image

எம்.மனோசித்ரா

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களாக தெரிவாகிய போதிலும் , எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டு வழி தவறி செயற்பட்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைந்து அதன் மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க அழைப்புவிடுப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தும் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட சிலர் அந்த தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டு ஐ.தே.க. இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது வேறொரு கட்சிக்காக பணியாற்றும் எந்தவொரு உறுப்பினரும் நிராகரிக்கப்படுவார் என்ற கட்சி அரசியலமைப்பிற்கு அமைய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொள்கிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியலமைப்பின் கீழ் , கட்சி உறுப்புரிமையைப் பெறுபவர்கள் அதற்கமைய தமது கடமையை நிறைவேற்ற வேண்டும். எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக தெரிவாகி எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டமையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, குறித்த உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு கட்சியில்  எடுத்த முடிவையும் அவர்களை பதவிகளில் இருந்து நீக்கியமையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கட்சிக்காகவும் கட்சியின் ஆதரவாளர்களுக்காவும் செயற்படுவர் என்று கட்சி எதிர்பார்க்கிறது. எனவே கடந்த காலங்களில் வழி தவறிய உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அதன் மேம்பாட்டுக்கு  ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19