சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்தி வைப்பு

Published By: MD.Lucias

15 Dec, 2015 | 05:40 PM
image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

ஒன்பதாம் கட்ட சம்பள பேச்சுவார்த்தை  இன்று கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.

 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பமான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

 

சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்களினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் முதலாளிமார் சம்மேளனத்தின் தரப்பினர்கள் எவ்வித பதில்களும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், உபதலைவர் மாரிமுத்து, ஜோதிகண்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக விஜயகுமார், உரூத்திரதீபன், தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பாக இராமநாதன், முருகையா மற்றும் பொருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள்  சார்பாக 22 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08