இலங்கை தென் கடற்­ப­ரப்பில் நாளை 13 ஆம் திக­தி­ வெள்ளிக்­கி­ழமை வானிலிருந்து மர்­ம­பொருள் விழும் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில்இ இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்­ப­ரப்பு எச்­ச­ரிக்கை வல­ய­மாக அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.


ஆகையால் குறித்த தினங்­களில் மீன­வர்கள் எவரும் மீன்­பி­டிக்க செல்ல கூடாது என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்­துறை அமைச்சு ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,


நாளை 13 ஆம் திக­தி­ வெள்ளி­கி­ழ­மை­ முற்­பகல் 11.48 மணிக்கு குறித்த மர்­ம­பொருள் தென் கடற்­ப­ரப்பில் விழும் என்று விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். இதனால் இலங்­கைக்கு பாதிப்­புகள் ஏற்­பட கூடும் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்­ப­ரப்பு எச்­ச­ரிக்கை வல­ய­மாக அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.


இதன்பிரகாரம் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என் றும் அறிவித்துள்ளது.